Thursday, 15 November 2018

கிணற்றுக்குள் விழுந்த கழுதைதானே....

கிணற்றுக்குள் கழுதை:- 

கிணற்றுக்குள் கழுதை:- 

விற்பன்னனுக்கு 
விருந்தோம்பல்...

வீறுகொண்டெழுந்த பேச்சுக்கு 
வாழ்த்துக்கள்...

வானூர்தி கோளாறில் 
கடல் வழியில் கதறுகிறேன்... 

வாழ்க்கையில், நீந்தத் தெரியாமல்

நீ இருந்தும் என்ன பயன்...
கிணற்றுக்குள் விழுந்த கழுதைதானே....
(கோகி )

ஏழையின் வைர கீற்று "வை..ப..வ..ம்"

ஏழையின் வைர கீற்று "வை..ப..வ..ம்"
ஏழையின் வைர கீற்று "வை..ப..வ..ம்"
(வை)ரம் போடா சொன்னார் 
வைர வியாபாரி...

பக்திமான் ஒருவர்  
(ப)ரிகாரம் செய்யச்சொன்னார்

(வ)யக்காட்டு வாழ்க்கைக்கு
வளமான வாய்ப்புக்களா?

"(ம்)...மா.." மேய்ப்பவனுக்கு
இம்மாம் பெரிய சுமையா?  

விடியற்காலை... நுனிப்புல் 
சிறு பனித்துளிக்குள்
எனக்கு கிடைத்த 
வைர ஒளிக்கீற்று "வை..ப..வ..ம்"
(கோகி)

புகழின் புதுக்கவிதை:-

புகழின் புதுக்கவிதை:- 
புகழின் புதுக்கவிதை:- 
புகழே! நீ ஒரு கணிகை, கால் கடுக்க உன்னைத் தேடி அலைபவர்களிடம் காசு பெற்றுக் காதல் வழங்குகிறாய்! 

புகழே! நீ ஒரு சந்திர மண்டலம். உன்னை முழுமையாக அடையும் முயற்சியில் பல மேதைகள் இன்னும் வெற்றி பெற முடியவில்லை. 

புகழே! நீ இமயத்தின் உச்சி. இடைவிட முயற்சியால் உன்னைச் சிலர் பிடித்து விடுவார்கள்! 

புகழே! நீ ஒரு பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளேயே வைத்து கெட்டியாகப் படிந்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்துவிடுகிறாய்! 

புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் வீழ்ந்த ஈ.க்கள் எழுந்ததே இல்லை! 

புகழே! நீ ஒரு நிழல். உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாய்!''

புகழ்வரினும் இகழ்வரினும்.... 
பாஸ் மார்க் அல்லது (டாஸ்...மார்க்)  

(``வைரமணிகள்') 

"இஃதோர் எடுத்துக்காட்டு!"

"இஃதோர் எடுத்துக்காட்டு!" 

குதூகலமான
இராட்டினமோ...  
தொங்கும் விடுதியோ... 
இம்மி பிசகினாலும் 
சங்கு உறுதி... 

அதீத ஆசைக்கும் 
ஆப்பு உண்டு 
இன்பமோ துன்பமோ
ஈகை இயற்க்கை... 
என்பதை 
எண்ணத்தில் வைத்தால்
ஏற்றமோ இ(ற)ரக்கமோ
ஐயமில்லை
ஒத்துக்கொள்ளாத உணவு 
ஓசியில் கிடைத்தாலும்
ஒவ்வாமை உண்டு என்பதை 
ஒளவையாரின் ஆத்திசூடியிலும் 
அஃதே துணை வள்ளுவரும்  
இஃதோர் எடுத்துக்காட்டு! 
(கோகி) 

Thursday, 25 January 2018

வாசிப்பு, சுவாசிப்பு, சகிப்பு

வாசிப்பு, சுவாசிப்பு, சகிப்பு:- 


வாசிப்பு என்பது 
புத்தகத்திற்கு மட்டுமல்ல... 
இசைக்கருவிகளுக்கும் தேவை.
சுவாசிப்பு என்பது 
உயிர்களுக்கு மட்டுமல்ல...
உணர்வுகளுக்கும் தேவை. 
சகிப்பு என்பது
உடலுக்கு  மட்டுமல்ல... 
உறைந்துகிடக்கும் உள்ளத்திற்கும் தேவை (கோகி ) 

நான் வாசிப்பதைக் கேட்டு 
உங்களின் சுவாசிப்பு நின்றுவிடாமல் 
சகிப்புத்தன்மையை கூட்டிக்கொள்ளுங்கள்.(கோகி )

Friday, 5 January 2018

இரட்டிப்பு இலாப நிதி நிறுவன முதலீடு:-

இரட்டிப்பு இலாப நிதி நிறுவன முதலீடு:-  
வாருங்கள் 
உங்களது  பணத்தை 
பத்திரமாக 
எனது சட்டைப்பையில் 
வைத்துவிடுங்கள்... 

"குருவிக் குடை!..."

"குருவிக் குடை!..."

அனுதினம் விழித்தெழுந்து
அதற்காகவே காத்திருந்தபோதும்,
குருவியளவு அதிர்ஷ்ட மழையில்  கூட...
நம்மை நனைந்துவிடாமல் காக்கும்...
நமது "தலைவிதி" என்கிற 

"குருவிக் குடை!..."
நன்றிகளுடன்-கோகி 


சிறு குருவியே ஆனாலும்....பனி மலையின் உச்சியில் நான் ...

சிறு குருவியே ஆனாலும்....பனி மலையின் உச்சியில் நான் 
சிறு குருவியே 
ஆனாலும்.... 
பனி மலையின் 
உச்சியில் நான் .....

மூர்த்தி சிறியது 
கீர்த்தி பெரியது 

நம்பிக்கை வலியது 
நன்றிகளுடன்-கோகி

வீண், விரயம் என்று எதுவும் இல்லை..இருந்திருப்பின்..

வீண், விரயம் என்று எதுவும் இல்லை..இருந்திருப்பின்...

நாளை பற்றிய நம்பிக்கைதான் 
நேற்றைய காயங்களுக்கு மருந்து.
விருப்பம் இருந்திருப்பின்... 
வீண், விரயம் என்று எதுவும் இல்லை, 
வீசியெறியவும் தேவையில்லை...
அனைத்தும் ஒரு படிப்பினை. ..  (கோகி)

பதியனிட வாய்ப்பளித்தமைக்கு.... நன்றி...

பதியனிட  வாய்ப்பளித்தமைக்கு....  நன்றி...

எனது எண்ணங்களின்
சிந்தனைப் பூச்செடியை ...
உங்களோடு...
உள்மனதில்
பதியனிட 
வாய்ப்பளித்தமைக்கு.... 
நன்றிகளுடன்... கோகி. 

முற்றிலும் மாறுபட்ட முடிவு...

வேகமும் V-வேகமும்

..கண்களுக்கு,
மித வேகமும் 
மிக வேகமும் 
ஒன்றுபோல தெரிந்தாலும்
விளைவு .... 
முற்றிலும் 
மாறுபட்ட 
முடிவு ...... (கோகி)   

"முடி-யும் ஆனா முடி-யாது"

"முடி-யும் ஆனா முடி-யாது" 

பணம் பண்ணப் பார்த்தேன்  
பயிர் விளைச்சல் இல்லாமல் போனது 
வணிகம் செய்ய நினைத்தேன் 
வரவு வளராமல் போனது
தேவை அது கிடைக்காமலும் 
தேவையற்றது நிறைய கிடைத்தது
எதையும் செய்யாமலே 
தலை முடி வளர்ந்தது..... 
கட்டி இழுத்துப்பார் 
வந்தால் மலை 
போனால்...... 
முடி-யும் 
ஆனா 
முடி-யாது   (கோகி)