Sunday, 13 December 2015

"வாழ்க்கை"

"வாழ்க்கை"
என்கிற மிதிவண்டி 
ஓடிக்கொண்டிருக்கும் வரை 
திடமாக இருக்கும்...
ஓய்ந்து நின்றுவிட்டால் 
தள்ளாடும்....

உதவிக்கு வரலாமா?.... கோகி 

"சுமை தாங்கி "


நீ என்னை சுமப்பது என்றால்
இப்போதே மயில் இறகாகி, 
இலகுவாகி, 
சுமக்கின்ற சுமையைகூட தராமல் 
உன்னோடு சேர்ந்து 
உயிர் வாழ்வேன்... கோகி 

"வெட்கம்"

"வெட்கம்"
பொட்டு வைத்த வாசப்படிகளுக்கும்
லட்சுமி கடாச்சம் வருமா என ஏக்கம்?
பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்...
உணவு வரும் வரை 
மானம் காக்கும் 
தட்டுக்கும் இல்லை... 
ஒட்டு பெற்ற கட்சிக்குமில்லை... 
"வெட்கம்"

"சொர்கம்"

"சொர்கம்"
"மகன்:- இறுதிக்கடன் செய்து சொர்கத்திற்கு 
அனுப்பிவைபதாக நம்பப்படுகிறது. 
மகளோ:- வாழும்போதே  
வீட்டை சொர்கமாக்குகிறாள்.
"பெண்ணைப் போற்றிடுவீர் ...
பெண் மகவை பெற்றிடுவீர்"  
...கோகி..  

ஏ புள்ள "நாம, ஜெயிச்சுபுட்டோமில்ல!!!

விலைவாசிய.... 
சமாளிக்கமுடியாத சிறுசுங்க....
ஒதுக்கி வச்சாங்களாம், பெருசுகளை...
நம்ம காலத்து பெருமை 
இவங்களுக்கு கிடைக்காத பொறாமை. 
ஏசியில வேலைசெய்யற இவங்க 
ஓசியில வாழ நினைக்கறாங்க...  
ஹ ஹ ஹ ஹ ...
ஏ புள்ள "நாம, ஜெயிச்சுபுட்டோமில்ல!!!" (கோகி) 

மூக்குக் கண்ணாடியே !!!

கண்ணுக்கு அணியும் 
மூக்குக் கண்ணாடியே !!!
காணும் காட்சிகள் 
கண்ணுக்கு சொந்தமில்லை, 
மனதிற்கு என்பதை 
மறந்துவிடாதே ....  கோகி.