Thursday, 25 January 2018

வாசிப்பு, சுவாசிப்பு, சகிப்பு

வாசிப்பு, சுவாசிப்பு, சகிப்பு:- 


வாசிப்பு என்பது 
புத்தகத்திற்கு மட்டுமல்ல... 
இசைக்கருவிகளுக்கும் தேவை.
சுவாசிப்பு என்பது 
உயிர்களுக்கு மட்டுமல்ல...
உணர்வுகளுக்கும் தேவை. 
சகிப்பு என்பது
உடலுக்கு  மட்டுமல்ல... 
உறைந்துகிடக்கும் உள்ளத்திற்கும் தேவை (கோகி ) 

நான் வாசிப்பதைக் கேட்டு 
உங்களின் சுவாசிப்பு நின்றுவிடாமல் 
சகிப்புத்தன்மையை கூட்டிக்கொள்ளுங்கள்.(கோகி )

Friday, 5 January 2018

இரட்டிப்பு இலாப நிதி நிறுவன முதலீடு:-

இரட்டிப்பு இலாப நிதி நிறுவன முதலீடு:-  
வாருங்கள் 
உங்களது  பணத்தை 
பத்திரமாக 
எனது சட்டைப்பையில் 
வைத்துவிடுங்கள்... 

"குருவிக் குடை!..."

"குருவிக் குடை!..."

அனுதினம் விழித்தெழுந்து
அதற்காகவே காத்திருந்தபோதும்,
குருவியளவு அதிர்ஷ்ட மழையில்  கூட...
நம்மை நனைந்துவிடாமல் காக்கும்...
நமது "தலைவிதி" என்கிற 

"குருவிக் குடை!..."
நன்றிகளுடன்-கோகி 


சிறு குருவியே ஆனாலும்....பனி மலையின் உச்சியில் நான் ...

சிறு குருவியே ஆனாலும்....பனி மலையின் உச்சியில் நான் 
சிறு குருவியே 
ஆனாலும்.... 
பனி மலையின் 
உச்சியில் நான் .....

மூர்த்தி சிறியது 
கீர்த்தி பெரியது 

நம்பிக்கை வலியது 
நன்றிகளுடன்-கோகி

வீண், விரயம் என்று எதுவும் இல்லை..இருந்திருப்பின்..

வீண், விரயம் என்று எதுவும் இல்லை..இருந்திருப்பின்...

நாளை பற்றிய நம்பிக்கைதான் 
நேற்றைய காயங்களுக்கு மருந்து.
விருப்பம் இருந்திருப்பின்... 
வீண், விரயம் என்று எதுவும் இல்லை, 
வீசியெறியவும் தேவையில்லை...
அனைத்தும் ஒரு படிப்பினை. ..  (கோகி)

பதியனிட வாய்ப்பளித்தமைக்கு.... நன்றி...

பதியனிட  வாய்ப்பளித்தமைக்கு....  நன்றி...

எனது எண்ணங்களின்
சிந்தனைப் பூச்செடியை ...
உங்களோடு...
உள்மனதில்
பதியனிட 
வாய்ப்பளித்தமைக்கு.... 
நன்றிகளுடன்... கோகி. 

முற்றிலும் மாறுபட்ட முடிவு...

வேகமும் V-வேகமும்

..கண்களுக்கு,
மித வேகமும் 
மிக வேகமும் 
ஒன்றுபோல தெரிந்தாலும்
விளைவு .... 
முற்றிலும் 
மாறுபட்ட 
முடிவு ...... (கோகி)   

"முடி-யும் ஆனா முடி-யாது"

"முடி-யும் ஆனா முடி-யாது" 

பணம் பண்ணப் பார்த்தேன்  
பயிர் விளைச்சல் இல்லாமல் போனது 
வணிகம் செய்ய நினைத்தேன் 
வரவு வளராமல் போனது
தேவை அது கிடைக்காமலும் 
தேவையற்றது நிறைய கிடைத்தது
எதையும் செய்யாமலே 
தலை முடி வளர்ந்தது..... 
கட்டி இழுத்துப்பார் 
வந்தால் மலை 
போனால்...... 
முடி-யும் 
ஆனா 
முடி-யாது   (கோகி)