Monday, 2 January 2017

உளறிக்கொட்டி கிளறி மூடுவதுதான் கவிதை !!!!

கவிதை...

மனதில் தோன்றும் 

எண்ணங்களின் உணர்வை, 
சுமக்கமுடியாமல், 
கொட்டித்தீர்ப்பதுதான் 
கவிதை...
அதாவது...
உளறிக்கொட்டி 
அதை அழகாக 
கிளறி மூடுவதுதான்... 
கவிதை.  
(கோகி-லா)

ஏழ்மைக்கு கிடைக்காத எள்ளுருண்டை!!!!

ஏழ்மைக்கு கிடைக்காத   எள்ளுருண்டை???
அங்கீகாரமும்... 
அகங்காரமும்... 
ஏழ்மைக்கு கிடைக்காத  
எள்ளுருண்டைகள்....  (கோகி-லா)

மற்றவரது எழுத்துக்களை கொள்ளையடிக்காதீர்கள் !!!...

கொள்ளையடிக்காதீர்கள் ... கொள்ளை கொள்ளுங்கள்..


மற்றவரது எழுத்துக்களை
கொள்ளையடிக்காதீர்கள் ... 
உங்களின் எழுத்துக்களால் 
மற்றவர் மனங்களைக் 
கொள்ளை கொள்ளுங்கள்...(கோகி-லா)

ஒரு தலைமுறைக்கு ஒரு மரமாவது ????

ஒரு தலைமுறைக்கு  ஒரு மரமாவது  ????

உங்களின் 
பல தலைமுறையினருக்கும் 
நான் 
உதவியாய் இருப்பேன்...
ஒரு தலைமுறைக்கு 
ஒரு மரமாவது  
நடக்கூடாதா??

உதவியாக இல்லாவிட்டாலும்
ஊறுவிளைவிக்காதீர்கள்....(கோகி-லா)

தல போல வருமா????

தல போல வருமா????

யோசனை...உனது பிம்பம் என் கண்ணில் பட்டபோது,
வாசனை ... என்னருகே நீ இருந்தபோதெல்லாம்...
சாதனை ... என் கன்னத்தில் உன் உதடுகள் பட்டபோது...
பாவனை ... என்னை நான் உணர்ந்துகொண்டபோது.
சோதனை ..தீராத நோயென என் காதுகள், மனதுக்கு சொன்னபோது. 
காலனை .. கண்டதால் நீ முந்திக்கொண்டபோது..
வேதனை ...உனது இழப்பு, என் கைகள் கன்னத்தில் இருந்தபோது. 
இத்தனை நடந்தபின்னும் இன்னும் எத்தனை... நாட்கள் 
உடலை இழந்த தலையாய் நான்... (கோகி..லா)