Tuesday, 5 July 2016

பாட்டியும் பேத்தியும்....... (கோகி)

பாட்டியும் பேத்தியும்....... (கோகி)
மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)

No comments:

Post a Comment