Wednesday, 6 July 2016

அதிர்ஷ்டம் அடிக்கவில்லை... குடித்துவிட்டு அப்பாதான் அடித்தார்.

அதிர்ஷ்டத்திர்க்காக 
நான் ஒத்தைக் காலில் 
நின்றாலும்...
அதிர்ஷ்டம் அடிக்கவில்லை... 
குடித்துவிட்டு அப்பாதான் அடித்தார். (கோகி)

Tuesday, 5 July 2016

தென்றலே...தெரியுமா?

தென்றலே...தெரியுமா? 
என் வீட்டு தோட்டத்தில் காய்த்த 
ஒரே ஒரு வெண்டைக்காயாக 
இருந்தாலும்.... 
அதில் செய்யும் சாம்பாரின் 
மனமும் சுவையும் 
வேறு எந்த சாம்பாரிலும் 
கிடைப்பதில்லை..... 

பாட்டியும் பேத்தியும்....... (கோகி)

பாட்டியும் பேத்தியும்....... (கோகி)
மசித்து பிசைந்த "மம்மு" சாதம்
எடுத்து ஊட்ட ஒரு தேக்கரண்டி போதும்
கட்டில் அருகே வந்து,
கண்டிப்பும் கட்டளையும் ஊட்டிவிட,
கண்களில் கண்ணீர் வரக்கண்டு...
காரம்தான் உரைத்ததோ என்று
ஒரு குவளை தண்ணீர் பருகத்தந்து
"சொன்ன பேச்சை கேட்கவேண்டும்
சமுத்தாக சாப்பிடவேண்டும்...என்ன? "
என அதிகார பரிமாறல்களோடு
பழுத்த பழத்திற்கு ஊட்டிவிடும் பிஞ்சுக் கைகள்
பாட்டியும் பேத்தியும்....... (கோகி)

கண்ணாடி மாளிகையின் கண்ணீர்

கண்ணாடி மாளிகையின் கண்ணீர்
வெப்ப நகரம் 
கண்ணாடி மாளிகையின் 
கண்ணீரால் 
குளிர்ந்தது..... 
எதோ ஒரு சில 
மரங்களின் 
புண்ணியத்தால்..

வண்ணவிளக்குச் சரம்

வண்ணவிளக்குச் சரம்

நட்சத்திர விடுதிக்கு 
போகும் வழியெங்கும் 
நட்சத்திரம்.... 
மின்னிக்கொண்டிருந்தது..