பானை பிடித்தவள் பாக்கியசாலி
நீ அவளுக்கு கவிதை படித்து
காக்கையாக கரைந்தாலும்....,
அவளுக்கு உதவிட
கழுதையாய் தேய்ந்தாலும்...,
நன்றி பாராட்டி
நாயாய் அலைந்தாலும்....,
உளறிக்கொட்டிய கவிதையால்...
உன் குரங்கு புத்தி தெரிந்துவிட...
குட்டு உடைந்துபோக....
பானை பிடித்தவள்
பாக்கியசாளி என
யாரோ வெள்ளைக் குதிரையில்
வந்தவன் அவளை தூக்கிச்சென்றான் ...(கோகி)